Home     Coimbatore News      Sports      உலகக்கோப்பை என்றாலே பாவம் நம் தென் ஆப்ரிக்கா!!!

உலகக்கோப்பை என்றாலே பாவம் நம் தென் ஆப்ரிக்கா!!!

   
உலகக்கோப்பை என்றாலே பாவம் நம் தென் ஆப்ரிக்கா!!!

இந்த உலகக்கோப்பையை கைப்பற்றுமா இல்லை கைவிடுமா தென் ஆப்ரிக்கா?

இங்கிலாந்து  311/8 (Stokes 89, Morgan 57, Roy 54, Root 51, Ngidi 3-66) 
தென் ஆப்ரிக்கா 207/10 (de Kock 68, van der Dussen 50, Archer 3-27)
தென் ஆப்ரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. 
நேற்று நடந்த ENGLAND VS SOUTH AFRICA உலகக் கோப்பை போட்டியில் IPL  ராஜஸ்தான் அணியை சேர்ந்த  ஜோப்பிர ஆர்ச்சர் (Jofra Archer) மற்றும் பேன் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சிறப்பாக ஆடியதால் ENGLAND அணி வெற்றியை கண்டது. ஜோப்பிர ஆர்ச்சர் தனது 90 mph வேகபந்தினால் ஆம்லாவை திணறவைத்ததும் ஆம்லா அடமுடியாமல் வெளியே சென்றுவிட்டார்.

Jofra Archer Fast Ball

இது தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது மேலும் தென் ஆப்ரிக்கா அணியின் தலைவர் Faf du Plessis ஆர்ச்சர் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆகியது இங்கிலாந்தின் வெற்றியை நிர்ணயம் செய்தது.
முதலில் களமிரங்கி பேட்டிங் செய்த  இங்கிலாந்து அணி 311 ரன்களை தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றியிலக்காக வைத்தது அதில் ஆட்ட நாயகன் பேன் ஸ்டோக்ஸ் அடித்து விளாசிய 89 ரன்கள், மோர்கன் அடித்த 57 ரன், ராய் அடித்த 54 ரன், ரூட் அடித்த 51 ரன்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது.
பேன் ஸ்டோக்ஸ் பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்களை கவர்ந்தது அவரின் முழு ஈடுபாட்டை காட்டியது.

England Team Victory

311 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை கொண்டு பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 207 ரன்களிலே விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது அதில் சிறப்பாக ஆடிய Quinton de Kock 68 ரன்களை அடித்து சிறப்பாக ஆடினார்.

Amla Hit By Jofra Archer

Related News