ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது         சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி இருக்கு         விஜய் vs அட்லீ         இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்         மீண்டும் ஆரம்பம் பட கூட்டணி ,அஜித் vs ஆரிய          ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் வெறும் 20 கோடி         விஜய்யின் லியோ பட வியாபாரம் இத்தனை கோடியா?         Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்         வாரிசு வசூலை முறியடித்த வாத்தி         அஜித் ஹீரோ விஜய் வில்லன் விரைவில் அதிகாரபூர்வ தகவல்         சம்பள பிரச்சனையால் நடிக்க மறுத்த விஜய்         லவ் இல் டுடே பெண்கள்         உலக அளவில் 5ஆம் இடத்தில் தல அஜித்         தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா         நடிகர் விஜய்க்கு அறுவை சிகிச்சை         வாத்தி பட பாடல் , அதிரடி அப்டேட்         துணிவு vs வாரிசு,முதல் நாள் வசூல்         வாரிசு மற்றும் துணிவு,அதிகாலை காட்சிக்கு தடை         வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது         13 கெட்ட வார்த்தைகள் கொண்ட 'துணிவு' படம்         ட்ரைலர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 துணிவு         உலகளவில் விஜய்யின் வாரிசு நம்பர் 1         டிக்கெட் புக்கிங் ஓபன்,துணிவு 22, வாரிசு 40 டிக்கெட்கள் விற்றுப்போய் உள்ளது.         பிணத்தை தூக்கிய அஜித்         துணிவுடன் துணிவு ப்ரோமோஷன்         டிவியில் வெளியாகும் வாரிசு சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு         தடைகளை தாண்டி உலகளவில்,வசூலில் மிரட்டும் ' அவதார் 2'         தளபதியின் "வாரிசு" வெற்றிபெற.. சபரிமலைக்கு சென்ற ரசிகர்கள்         இந்தியாவின் சிறந்த படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்று உள்ளது.         ஜீவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்         ஹ்ரித்திக் ரோஷன் காந்தார படத்தின் நடிகர் ரிஷப ஷெட்டியை பாராட்டியுள்ளார்         துனிவு பற்றிய மிகவும் மதிப்புமிக்க புதுப்பிப்புகள்         கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து        
Home     Coimbatore News      Sports      இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

   
இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

13-வது ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 12-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.

லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரையிறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று  18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அணி 8-வது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு இன்றைய அரையிறுதி போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மாதம் 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. கடைசியாக இரு அணிகள் இடையே நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இதனால் இந்தியா அணி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான லீக் பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

அதே நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. நியூசிலாந்து அணி கடந்த காலங்களில் நாக்அவுட் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரையிறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.

இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News