Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

   
3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டி செய்வதாக கூறியது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஷ் - வார்னர் களமிறங்கினர். மார்ஷ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 16, ஜோஸ் இங்கிலிஸ் 1, மேக்ஸ்வெல் 12 என வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும்  மறுமுனையில் அதிரடியாக ஆடிய வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து டிம் டேவிட் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் வெற்றிக்காக போராடிய டிம் டேவிட் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News