Home     Coimbatore News      Sports      PUBG வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

PUBG வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

   
PUBG வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

PUBG(Player's Unknown Battle Grounds) என்ற மொபைல் கேம் இந்தியாவின் இளைஞர்கள்ளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டை தென் கொரிய நாட்டில் உள்ள Bluehole நிறுவனம் PUBG Corporation மூலம் வெளியிட்டது. இப்போது இந்த விளையாட்டை உலகில் தினசரி 10 கோடி மக்கள் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். அந்த PUBG கேம்-ஐ விளையாடும் இளைஞர்கள் தனியொரு உலகில்தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு வேண்டாம், உறக்கம் வேண்டாம், நண்பன் வேண்டாம், பெற்றோர் வேண்டாம் இவ்வாறு இருக்கும் அந்த இளைஞகர்களிடம் வன்மம், பழிவாங்கும் எண்ணம், கொலை செய்வது மற்றும் தீவிரவாதம் போன்ற எண்ணங்களே மேலோங்கி இருக்கும். படித்தவர்கள், படிக்காதவர்கள், வேற்று மொழியினர், வெளிநாட்டினர் என பலரும் பேசிக்கொண்டே கலந்து விளையாடலாம்.

அப்படி என்ன இந்த விளையாட்டில் உள்ளது என்று பார்த்தால், PUBG கேம்-ல் 100 வீரர்கள் ஒரு தீவினுள் ஒருவரை ஒருவர் கொன்று அல்லது ஒரு அணியினரை மற்றொறு அணியினர் கொன்று வெற்றி பெறுவது தான். இவ்விளையாட்டை மூன்று வீதமாக விளையாடலாம் ஒருவர் அல்லது இருவர் கொண்ட அணி மற்றும் நான்கு பேர் கொண்ட குழுவினராக விளையாடுவது இதன் சிறப்பம்சமாகும். விளையாட்டின் உள்ளே சென்றதும் மற்ற 99 விளையாட்டு வீரர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும், காத்திருந்து உள்ளே சென்றால் விமானம் ஒன்றில் தீவிற்கு பயணம் செய்து, பிடித்த இடங்களில் இறங்கி ஆயுதங்களை சேகரித்து கொண்டு மற்ற வீரர்களை கொல்கிறார்கள், இந்த விளையாட்டில் தோற்று வெளியேறும் முன் Knock-Out  என்ற ஒரு வாய்ப்பு உள்ளது அது அணியாக விளையாடினால் மட்டுமே கிடைக்கும் அவ்வாறு Knock-Out ஆகி சில மணித்துளிகளில் நம் அணியினர் வந்து காப்பாற்றினால் மீண்டும் விளையாட்டில் தொடரலாம். 
PUBG விளையாடின் பின் விளைவுகள்:

  • PUBG  கேமை தொடர்ந்து விளையாடினால் ஒருவரின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் அருகில் உள்ளவருடன் சகஜமாக பேச எண்ணம் வராது.
  • உணவு பழக்கம் மாறுபடும், இதனால் உடல்நலம் சீர்கெடும்.
  • இரவு தூங்கும் முன் இந்த விளையாட்டை விளையாட தொடங்கினால் அன்றாடம் உள்ள தூக்கநேரம் மாறுபடும் இதனால் இதயநோய் வர வாய்ப்பு உள்ளது.
  • தொடர்ந்து மொபைல் போன் திரையை பார்த்துக்கொண்டே இருப்பதினால் கண்கள் பாதிக்கப்படும்.


மருத்துவர் பார்வையில்:

  • இந்த விளையாட்டை மருத்துவர்கள் PUBG-ஐ "டிஜிட்டல் போதை பொருள்" என்று கூறுகின்றனர்.
  • மருத்துவர்கள் விளையாட வேண்டாம் என்று கூறவில்லை அடிமை ஆகிவிடாதீர்கள்! அதிக நேரம் செலவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுகின்றனர்.

Related News