விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      2024 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய கேப்டனாக தொடர்கிறார் ரோகித் சர்மா

2024 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய கேப்டனாக தொடர்கிறார் ரோகித் சர்மா

   
2024 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய கேப்டனாக தொடர்கிறார் ரோகித் சர்மா

2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

"2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

இதன் மூலம், டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News