Home     Coimbatore News      Sports      பாகிஸ்தானின் பரிதாப நிலை!!!

பாகிஸ்தானின் பரிதாப நிலை!!!

   
பாகிஸ்தானின் பரிதாப நிலை!!!

Score card

West Indies மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணியை 21.4 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களையும் இழக்க செய்தது.ஆட்டநாயகனான ஓஷனே தாமஸ் 5.4 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் அணி 105 ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது மேற்கிந்திய அணிக்கு.

West Indies Victory sign
பின்னர் களமிறங்கிய  மேற்கிந்திய அணி 108 ரன்களை 13.4 ஓவர்களிலே அடித்து விலாசியது. அதில் நமது கிறிஸ் கையில் அருமையாக ஆடி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்து தன் விக்கெட்டை இழந்தார்.  அதன் பின் பேட்டிங் செய்த வீரர்கள் சீராக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து சென்றனர்.
இந்த உலகக்கோப்பை மேற்கிந்திய தீவுகளுக்கே என்றும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

Chris Gayle
வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் அணி தலைவர் கூறியுள்ளார்.

Pakistan Captain

Related News