விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 511 ரன்கள் குவித்தது - ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 511 ரன்கள் குவித்தது - ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்

   
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 511 ரன்கள் குவித்தது - ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய கேன் வில்லியம்சன் 118 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டிதான். 4-வது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 240 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ரன்களிலும், டேரில் மிட்செல் 34 ரன்களிலும், மேட் ஹென்ரி 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நீல் பிராண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News