இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ரஜத் படிதார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஜத் படிதார் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.
இந்திய அணி விவரம்:- ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், பரத், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், அஸ்வின், பும்ரா, முகேஷ் குமார்.
இங்கிலாந்து அணி விவரம்:- ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், ஹார்ட்லி, ஃபோக்ஸ், அகமது, பாஷீர், ஆண்டர்சன்
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.