இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் இன்றும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய்ஸ்வால் பஷீர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி விளாசி இரட்டை சதம் அடித்தார். இதனால் ஜெய்ஸ்வால் இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய மண்ணில் அவருக்கு இது முதல் சதமாகும். முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தியுள்ளார்.
ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது முடிந்து 37 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.