Home     Coimbatore News      Sports      நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்ததை நீங்க கவனிச்சிங்களா?? தற்போது வைரலாகி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்ததை நீங்க கவனிச்சிங்களா?? தற்போது வைரலாகி வருகிறது.

   
நேற்றைய ஆட்டத்தில் தோனி  செய்ததை நீங்க கவனிச்சிங்களா?? தற்போது  வைரலாகி வருகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோனி சதமடித்ததை விட ஃபீல்டிங் சரி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

அனைவரும் எதிர்ப்பார்த்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்தொடர் நாளை தொடங்க உள்ளது.முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்த நிலையில், நேற்று வங்க தேசத்துடன் தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வெற்றி  கண்டது இந்தியா.

தொடக்கத்தில் இந்திய வீரர்கள் சற்று திணற, கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் 4-வது இடத்துக்கான கேள்விக்குப் பதில் தரும் விதமாக விளையாடி இருக்கிறார் ராகுல். மிடில் ஓவர்களில் தோனியுடன் சேர்ந்து சதம் அடித்தார். தோனியும் சதம் அடிக்க இந்திய அணி 359 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய வங்க தேசம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 தற்போது இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் கோலி தோனியிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவ்வாறு கோலி கேப்டனாக இருக்கும்போதே தோனி ஃபீல்டிங் செட் செய்வதைப் பல முறை பார்த்திருப்போம். தோனியின் முன் அனுபவம்   பல நேரங்களில் இந்திய அணியின் வெற்றிக்கும்  காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் எதிரணியின் ஃபீல்டிங்கை சரி செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தோனி.

முதல் இன்னிங்ஸின் 40-வது ஓவரை வீச வந்தார் வங்கதேசத்தின் ஷபிர் ரஹ்மான். அப்போது தோனி பேட்டிங் செய்யத் தயாரானார். ஷபிர் பந்துவீச ஓடி வந்த  நிலையில் தனது லெக் சைடில் நிற்கவைக்கப்பட்ட வீரர், ஃபீல்டிங் செட் செய்யப்பட்ட இடத்தில் நிற்கவில்லை. இதைக் கவனித்த தோனி, பந்துவீச்சாளரை உடனடியாக நிறுத்தி, அதைச் சுட்டிக்காட்டினார். இதை வங்க தேச அணியின் கேப்டனும் பந்துவீச்சாளரும் தோனி கூறும் வரை கவனிக்கவில்லை. தோனி கூறியதும் உடனடியாக முதலில் சொன்ன இடத்தில் நிற்குமாறு அறிவுறுத்தினார் ஷபிர். இந்தச் சம்பவத்தை கவனித்த ராகுல் மற்றும் நடுவர்கள் புன்னகைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News