Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

   
U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

15-வது ஜூனியர் U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்களிலும், சச்சின் தாஸ் மற்றும் பிரியன்ஷு மோலியா 9 ரன்களிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பொறுப்புடன் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 47 ரன்களிலும், முருகன் அபிஷேகம் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 43.5 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐசிசி கோப்பையை தவறவிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News