Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

   
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைப்பெற்று வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் முதலாவது அரையிறுதி ஆட்டம் தென்ஆப்பிரிக்கா பெனோனியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை அடித்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களும் அடித்தனர்.

இந்தியா அணி சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி 69 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை அடித்தனர்.

போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களும், சச்சின் தாஸ் 96 ரன்களும் அடித்தனர்.

இந்த வெற்றி மூலம் U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி இருக்கிறது. பிப்ரவரி 11-ம் தேதி இறுதி போட்டி நடைபெற இருக்கிறது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News