இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி முதலில் 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி சதமடித்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார். 4-வது விக்கெட் இழப்பிற்க்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ரன் அவுட்டானார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்தது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.