இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்தியா அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் விசாகப்பட்டினத்தில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.