Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகல்: இடது கை பேட்ஸ்மேன் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகல்: இடது கை பேட்ஸ்மேன் சேர்ப்பு

   
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகல்: இடது கை பேட்ஸ்மேன் சேர்ப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால்பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் இந்தியா அணியில் இடம் கிடைத்துள்ளது. ரஞ்சி டிராபியில் தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கு எதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News