Home     Coimbatore News      Sports      Cricket World Cup Hiotories(1975 to 2019)

Cricket World Cup Hiotories(1975 to 2019)

   
Cricket World Cup Hiotories(1975 to 2019)

உலகக் கோப்பைப் போட்டிகள் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கால்பந்து உலக கோப்பை ஆனால் தற்போது அந்நிலை மாறி கிரிக்கெட் உலக கோப்பை பிரபலமாகி உள்ளது. 12வது முறையாக நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி may 31-ல் London ல் உள்ள The Oval ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. England மற்றும் South Africa ஆகிய இரு அணிகளும் முதல் போட்டியில் மோத உள்ளன.

cwc

உலகக் கோப்பை வரலாறு.
 இதுவரை 11 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுள்ளது. அதில் ஐந்து முறை   ஆஸ்திரேலியாவும், இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரு முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது.ஆனால் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

முதல் உலகக் கோப்பை

முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில்இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள் உற்பட எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 291 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 274 ரன்ககளும் எடுத்தது. இதனால்  மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17  ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது உலக கோப்பை

இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடா உற்பட எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.

WORD CUP STATISTICS

 

 

 

 

1983ல் நடந்த மூன்றாவது போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியாஅதிரடியாக விளையாடி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில்வென்று. அனைவரும் வியக்கும் வகையில் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.

 

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக ஆட்டம் 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த உலக கோப்பை போட்டி இந்தியத்துணைக் கண்டத்தில் நடைபெற்றது. இங்கிலாந்தின் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் பகலொளி நேரம் குறைவாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். இந்த உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி
இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

 

 

 

 

 

1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் தென்னாபிரிக்க அணி உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்டது.
 

 

1996 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடத்தின.

 

 

 

india

 

 

 

2011 உலகக் கோப்பைப் போட்டியில் Dhoni தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியத்தில்  இலங்கையை வென்று இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை தட்டிச்சென்றது

 

2015 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியத்தில் வென்று ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.

 

12-வது முறையாக நடைபெற உள்ள 2019 உலக கோப்பை போட்டியில் இடம்பெற்ற 10 அணிகள்.
1.INDIA
2.ENGLAND
3.PAKISTAN
4.AFGHANISTAN
5.AUSTRALIA
6.BANGLADESH
7.NEW ZEALAND
8.SOUTH AFRICA
9.SRI LANKA
10.WEST INDIES

 

 

Related News