உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்தியா அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கே.எல்.ராகுல் 66 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஆஸ்திரேலியா அணி 43 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு டிராவில் ஹெட் அதிரடியாக ஆடி 137 ரன்களையும், லபுஷேன் 58 ரன்களையும் குவித்தனர்.இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.