விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி

   
இலங்கைக்கு  எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்னில் அவுட்டானார். சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை அனுபவ வீரர் முகமது நபி, ஒமர்சாய் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் அடித்தது. முகமது நபி 136 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒமர்சாய் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News