சொல்லியடி டாஸ்க்கில் பிக்பாஸ் கவின் குரல் !         ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     Coimbatore News      Sports      சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடம் நிறைவு செய்தார் தோனி

சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடம் நிறைவு செய்தார் தோனி

   
சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடம் நிறைவு செய்தார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான தோனி  சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமா நேற்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்தார்.

 ராஞ்சியை சேர்ந்த தோனி கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.

பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக உருவெடுத்த தோனி இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள்(ODI) போட்டி, 90 டெஸ்ட்(Test), 98 டி 20 ஆட்டங்களில் விளையாடி 17,266 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 839 வீரர்களை வெளியேற்றியுள்ளார்.

2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார் - அதுவே இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. அந்த ஆண்டில் பிற்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் தற்போதைய உலக சாதனையையும் செய்துள்ளார்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி(ICC) ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான   விளையாட்டு வீரர்  என்ற விருதை பெற்றார். 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதை பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி(MS Dhoni) முதலாவதாக இருக்கிறார்.

கேப்டனாக இந்திய அணிக்கு 2007-ல் டி 20 உலகக் கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார். மேலும் டெஸ்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு சென்றார். இதுதவிர ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறையும் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News