சொல்லியடி டாஸ்க்கில் பிக்பாஸ் கவின் குரல் !         ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     Coimbatore News      Sports      தோனி ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் அதிர்ச்சி..

தோனி ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் அதிர்ச்சி..

   
தோனி ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் அதிர்ச்சி..

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிஎன்என் நியூஸ் 18-க்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இச்செய்தி தோனி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் விரைவில் இந்திய அணியின் கேப்டனாகவும், மிகசசிறந்த விக்கெட் கீப்பராகவும் உருவெடுத்தார். ஆடுகளத்தில் இவரது பொறுமையும், கூறும் ஆலோசனையும் இவருக்கு கூல் கேப்டன் என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

சிறந்த கேப்டனாக செயல்பட்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை மற்றும் T20 போட்டிக்கான உலகக்கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மட்டும் விளையாடிவரும் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனியே முடிவு செய்வார் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.


கடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தோனி இதுவரை எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பது தோனி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News