ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டியில் சென்னை-ஹைதராபாத் அணிகள் நேற்று மேதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 6 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சென்னை அணியின் அபார வெற்றியை தொடர்ந்து விளையாட்டில் நடந்த சில காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒன்று தோனி நடுவரை பார்த்து முறைத்தது.
19வது ஓவரை சி.எஸ்.கே வீரர் ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அப்போது பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசினார் ஷல்துல் தாக்கூர். அந்த பந்து ஓய்டு என்பது போன்று தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவர் அவ்வாறு வீசியிருந்தார். அதற்கு நடுவர் ஓய்டு என்று வழங்கினார். இந்த முறையும் நடுவர் கையை அகலமாக விரிக்க முயற்சிக்கையில் தோனி அவரை பார்த்து முறைத்தார்.
அத்துடன், வாயில் ஏதோ முனகினார். உடனே நடுவர், கையை கீழே இறக்கினார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோபமடைந்த முகபாவனையை காட்டினார். காரணம் இதன் மூலம் ஹைதரபாத் அணிக்கு 1 ரன் கிடைக்காமல் போனது.
FairPlay award goes to #CSK pic.twitter.com/ZiRUIaMCiu
— ✨💫 (@Kourageous__) October 13, 2020