இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     Coimbatore News      Sports      பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் !

பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் !

   
பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் !

இதுவரை நடைபெற்று முடிந்த 12 ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கோப்பையை கைப்பற்றி உள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகளில் மற்ற அணிகள் நெருங்க முடியாத இரு ஜாம்பவான் அணிகளாக சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் திகழ்ந்து வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்பது இந்தியா பாகிஸ்தான் போட்டி போன்று பரபரப்பான ஒரு போட்டியாகவே இதுவரை அமைந்து வருகிறது.

இரண்டு அணிகளுமே ஐபிஎல் இன் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் மும்பை அணி இதுவரை 5 முறை இறுதிப் போட்டியிலும், சென்னை அணி 8 முறை ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளன. இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் மும்பை அணி 17 முறையும் ,சென்னை அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேனாக ரெய்னாவும், மும்பை அணியை பொறுத்தவரை பவுலராக மலிங்காவும் தான் அதிக ரன் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளனர். இருவருமே இந்த சீசனில் ஆடாதது இரு அணிகளுக்கும் ஏற்பட்ட பின்னடைவு என்றே கூறலாம். இருப்பினும் சென்னை அணியில் சாவ்லா, பிராவோ ஆகியோர் ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக திகழ்கின்றனர்.

மும்பை அணியில் மலிங்காவுக்கு மாற்றாக வந்த போல்ட் மற்றும் மெக்லனகன் ஆகியோரை பயன்படுத்திக்கொள்ளும், மேலும் அதிக சிக்சர் அடித்த டாப்-10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சென்னை அணி சார்பாக தோனியும், வாட்சனும் உள்ளனர். அதேபோன்று மும்பை அணி சார்பில் ரோகித் சர்மாவும், பொல்லார்டும் உள்ளனர். 2014ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் முதல் பாதி துபாயில் நடைபெற்றது.

அந்த தொடரில் அங்கு விளையாடிய ஐந்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவி இருந்தது. ஆனால் சென்னை அணி அங்கு நடைபெற்ற 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஸ்லோவா பிட்ச்களில் டாஸ் வெல்வது அவசியமாக கருதப்படுகிறது. மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சென்னை அணி பிரகாசிக்கும் என்றே கூறலாம். ஏனெனில் இம்ரான் தாஹிர், ஜடேஜா, சான்டனர் மற்றும் தமிழக வீரர் சாய் கிஷோர், கரண் ஷர்மா என சுழற்பந்து வீச்சு பட்டாளமே இங்கு விளையாட காத்திருக்கிறது.

பேட்டிங்கில் இரு அணிகளும் சம பலம் கொண்டுள்ளது. ஆனால் பவுலிங்கை பொறுத்தவரை சென்னை அணி சற்று தூக்கலாகவே இருக்கிறது என்று கூறலாம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி காண வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் சமமாகவே உள்ளது. ஐபிஎல் தொடரில் சாம்பியன்களாக கருதப்படும் இரு அணிகளுக்குமே இந்த முதல் போட்டியில் 50:50 வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related News