சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் பெரும் சவால்களை கடந்து தன் திறமையை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து வருசக்கரவர்திக்கு பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு சென்றார். அங்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி சாதனைகள் படைத்த பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் சொந்த ஊரான சின்னப்பம்பட்டி திரும்பினார்.
வெளிநாட்டில் இருந்து வந்ததால் அரசு விதிமுறைகளின்படி வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் நடராஜனுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்...