Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Spiritual      இஷா யோகா மையம் கோவை, தமிழ்நாடு | தியானலிங்க கோயில்

இஷா யோகா மையம் கோவை, தமிழ்நாடு | தியானலிங்க கோயில்

   
 இஷா யோகா மையம் கோவை, தமிழ்நாடு | தியானலிங்க கோயில்

ஈஷா யோகா அறக்கட்டளை என்பது ஆன்மீக இலாப நோக்கற்ற அமைப்பாகும், ஈஷா யோகா மையம் (Isha Yoga Center Coimbatore) 1992 ஆம் ஆண்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்பவரால் இந்தியாவின் வெல்லியாங்கிரி மலை அடிவாரத்தில் நிறுவப்பட்டது. ஈஷா என்ற வார்த்தையின் பொருள் உருவமற்ற தெய்வீகம் என்பதாகும்.

 

இந்த அறக்கட்டளை ஒவ்வொரு மாதமும் ஈஷா யோகா என்ற பெயரில் பல யோகா நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் வழங்கி வருகிறது. இந்த புகழ்பெற்ற ஈஷா யோகா மையம், உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது, மேலும் இந்த அறக்கட்டளையானது 9 மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது.

யோகா வின் நான்கு முக்கிய நிலைகளான ஞான (அறிவு), கர்மா (செயல்), கிரியா (ஆற்றல்), மற்றும் பக்தி (பக்தி) ஆகியனவற்றில் அவரின் அயராத பங்களிப்பால் உலகளாவிய மக்களின் ஆதரவை பெற்று புகழ் உச்சியை அடைந்தவர் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

 

ஈஷா யோகா மையத்தின் சிறப்பு அம்சங்கள்!!!

ஆதியோகி சிலை

ஆதியோகி சிலை சத்குரு ஜக்கி வாசுதேவால் (ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர்) வடிவமைக்கப்பட்ட இந்து பகவான் சிவன் சிலையாகும். மேலும் இந்த சிலை உலகின் "மிகப்பெரிய மார்பளவு சிற்பம் (Largest Bust Sculpture)" என்று கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த சிலை சுமார் 34.3 மீட்டர் உயரமும் (112.4 அடி), 45 மீட்டர் நீளமும் (147 அடி), 7.62 மீட்டர் அகலமும் (24.99 அடி) கொண்டது. இதன் எடை சுமார் 500 டன் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்).

ஆதியோகி சிலை பற்றி சத்குரு கூறுகையில், "ஆதியோகி சிலை, யோகாவை ஊக்குவிப்பதற்கும் எழுச்சியூட்டும் வகையில் நிறுவப்பட்டதாக  குறிப்பிட்டார்”. மேலும் சிவன் பகவானே யோகாவை உருவாக்கியவர் என்று நம்பப்படுவதாலும், அவரே “முதல் யோகி” என வணங்கப்படுவதாலும் இச்சிலைக்கு“ ஆதியோகி என பெயர் சூட்டினார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

 

தியானலிங்கம் (Dhyanalinga)

ஈஷா யோகா மையம், உலகின் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த ஆற்றலை தியானலிங்க வடிவத்தில் உருவாக்கியிருக்கிறது. மேலும் இந்த சக்திவாய்ந்த ஆற்றலை குவிமாடம் கட்டமைப்பில் 250,000 செங்கற்களின் கீழ் தூண்கள் இல்லாமல் அமைத்திருக்கிறார்கள்.

லிங்க பைரவி (Linga Bhairavi)

லிங்க பைரவி மிகவும் சக்திவாய்ந்த முக்கோண வடிவில் அமைந்தருளி இருக்கும் பார்வதி தேவியின் அம்சமான பெண் தெய்வமாகும். இங்கு பைரவி தேவியை லிங்க வடிவில் பிரதிஷ்ட்டை செய்து வழிபடுகின்றனர். லிங்க பைரவியின் அருளை பெற, இங்கு எந்த வித பாகுபாடின்றி மக்கள் வெள்ளம் தினம்தோறும் அலைமோதுகிறது.

தீர்த்த குண்டம் - ஒரு நிலத்தடி நீர் அமைப்பு

ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தனித்துவமான தியான மையத்திற்கு வருகை தந்து இந்த தீர்த்தத்தில் நீராடி, மனஅமைதியும் நல்வாழ்வைமும் அடைகிறார்கள்

இஷா புத்துணர்ச்சி திட்டங்கள்

ஒரு நபரின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான அறிவியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய யோகா பயிற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது

ஓம் தியானம்

இந்த ஓம் தியானம் அனைத்து தியானலிங்க பார்வையாளர்களுக்கும் ஒரு எளிய தியான பயிற்சி ஆகும், இது ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.

இஷா கிராஃப்ட்ஸ் ஸ்டால்

தியானலிங்க கோயிலுக்கு அடுத்து - சிறந்த கைவினைப்பொருள் தலையணை கவர்கள், தியான மெத்தைகள், வண்ணமயமான பர்ஸ்கள், இஷா டி-ஷர்ட்கள், சத்குருவின் புத்தகங்கள், டிவிடிகள் மற்றும் சிடிக்கள் ஈஷா கிராஃப்ட் ஸ்டால்களில் கிடைக்கின்றன. அனைத்து கைவினைப் பொருட்களும் ஈஷா யோகா தன்னார்வலர்களால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அனைத்து கைவினைப் பொருட்களும் உள்ளூர் கிராம மக்களால் தயாரிக்கப்படுகின்றன.

விழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி  மற்றும் ஈஷா  ஃபெஸ்ட் போன்ற கொண்டாட்டங்கள் மூலம் ஈஷா அறக்கட்டளை அனைத்து கலாச்சாரங்களையும் ஒருங்கிணைத்து உலகமக்கள் அனைவரின் கண்களுக்கு  விருந்தளிக்கிறது.

 ஈஷா யோகா மையத்தை தொடர்பு கொள்ள

Velliangiri Foothills, Ishana Vihar Post,

Coimbatore - 641 114, INDIA.

Telephone: 83000 83111

Email: info@ishafoundation.org

MAP 

Related Images

 

Related News