மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      Spiritual      மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

   
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, 12 நூற்றாண்டில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற மலை கோயிலாகும். இந்த கோயில், தமிழ்நாட்டில் கோவையில் (Coimbatore) அமைந்துள்ளது. ஏழாவது படை கோவிலாக கருதப்படும் இக்கோவிலில், முருகன் பெருமாள் தண்டயுதாபனி வடிவத்தில் எழுந்தருளி அருளப்பதித்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான முருகன் கோயில்களைப் போலவே, இக்கோயிலும் 600 அடி (180 மீ) உயரமுள்ள கிரானைட் மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியிலும் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் ஒரு அழகிய மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு முருக பெருமாளுக்கு, தைபூசம் தினத்தன்றும் மற்றும் பிற விசஷ தினங்களிலும் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மருதமலையில் இரண்டு நீரூற்றுகள் உள்ளன, அவை மருதா தீர்த்தம் என்றும் & பாம்பாட்டி சுனை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தீர்த்தம், பல நோய்களை குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

maruthamalai-temple-pancha-virutcha-vinayagar

கோயில் பிரகாரத்தின் தெற்கு முனையில் அமைந்தருளியிருக்கும் வலம்புரி பிள்ளையார்தான்தோன்றி விநாயகர்” என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது இங்கு அமைந்துள்ள பாம்பாட்டிசித்தர் குகையாகும். பாம்பாட்டி சித்தர் 12 நூற்றாண்டில் வாழ்ந்த 18 புகழ் பெற்ற சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்டவர். அவர் மருதமலையடிவாரத்தில் நிகழ்த்திய தவத்தின் பயனாய் முருகன்பெருமாள் அவருக்கு பாம்பின் வடிவில் தோன்றி அருள்பாலித்தார். பின்னர் முருக பெருமாள் தனது துணைவியார் வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் தோன்றி மருத தீர்த்தத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

 

முருக பெருமாளின் கருவறை மற்றும் பாம்பாட்டி சித்தரின் குகை ஆகியவற்றிலிருந்து இணைக்கும் ஒரு சுரங்கப்பாதை இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் பாம்பாட்டி சித்தர் முருகனை வழிபட இப்பாதையை இன்றும் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.

கட்டடக்கலை பாணி: திராவிட கட்டிடக்கலை

தூரம் (கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து): 15 கி.மீ.

கோயில் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை & 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பூஜா நேரம்

  • விஸ்வரூப தரிசனம்  - 05.30 A.M
  • காலசந்தி பூஜை  - 08.30 A.M
  • உச்சிக்காலம் பூஜை- 11.30 A.M
  • சயரட்சை பூஜை  - 04.30 P.M
  • அர்த்த ஜாம பூஜை - 07.30 P.M

கோவிலுக்கு தொடர்பு கொள்ள

அழைக்கவும்: 0422 242 2490

Address: Temple Rd, Maruthamalai, Coimbatore, Tamil Nadu 641046

Website: http://www.marudhamalaimurugantemple.tnhrce.in/

Mail: maruthamalaimurugankoil@gmail.com

Location Map: Click Here

Related Images

paambaati-siddhar-kugai-marudhamalai-temple

maruthamalai-temple-pancha-virutcha-vinayagar

Paambatti_siddhar_history

Related News