திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      Politics      யார் இந்த சுஷ்மா சுவராஜ் ? தெரிந்துகொள்ளுங்கள்

யார் இந்த சுஷ்மா சுவராஜ் ? தெரிந்துகொள்ளுங்கள்

   
யார் இந்த சுஷ்மா சுவராஜ் ? தெரிந்துகொள்ளுங்கள்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ்(Sushma_Swaraj) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (06/08/2019) இரவு காலமானார்.
சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது ஆகிறது. இவர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் அம்பாலா கான்ட் இல் பிறந்தவர் ஆவர்.

1973 ஆம் ஆண்டில், ஸ்வராஜ் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்கினார். சுஷ்மா ஸ்வராஜ் 1975 இல் ஜார்ஜ் பெர்னாண்டஸின் சட்ட பாதுகாப்புக் குழுவில் ஒரு பகுதியாக ஆனார். ஜெயபிரகாஷ் நாராயணின் மொத்த புரட்சி இயக்கத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவசரநிலைக்குப் பிறகு, அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர், அவர் பாஜகவின் தேசியத் தலைவரானார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் கௌஷலை 1975ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் திருமணம் செய்து கொண்டார். 

1970ல் மாணவர் தலைவராக இருந்தார் சுஷ்மா ஸ்வராஜ், அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய அவர், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவசர காலத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய அரசியல் மீது அவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் துணிச்சல் அவரை டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக்கியது. பின்னர் சுஷ்மா ஸ்வராஜ், முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 

சுஷ்மா ஸ்வராஜின் சாதனை பயணம் :

1977 - அவரது 25வது வயதில் இந்தியாவின் இளம் கேபினட் அமைச்சரானார் சுஷ்மா ஸ்வராஜ்.
1979 - 27 வயதில் ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.
1987-90 அமைச்சரவை அமைச்சர், கல்வி, உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், ஹரியானா அரசு.
1990ல் இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் ஆளுநர் ஆனவர் ஸ்வராஜ் கௌஷல்.
1990 - 1993 வரை மிசோரத்தின் ஆளுநராக ஸ்வராஜ் கௌஷல் பணியாற்றினார்.
1998 - 2004 வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
2003 - 2004 சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்.
2006 - 2009 மாநிலங்களவை உறுப்பினர். 

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.
இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

2009 - 2014  எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் லால் கிருஷ்ணா அத்வானிக்கு பதிலாக.
2014 - 2019 இந்திய ஒன்றியத்தில் வெளியுறவு அமைச்சர். 

வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்கள் பலரை மீட்க பேருதவியாக செயல்பட்டவர் என்ற பெருமை இவரையே சாரும்.

 இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்

திடீரென நேற்று இரவு 9 மணியளவில் சுஷ்மா சுவராஜுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், கடுமையான மாரடைப்பு என்பதால்  மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரவு 10.50 மணிக்கு சுஷ்மா சுவராஜின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் 12.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து சுஷ்மா ஸ்வராஜின் உடல் எடுத்து செல்லப்பட்டது. சுஷ்மாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளனர். 

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்ற பிரதமர் மோடி அரசின் அறிவிப்பினை அவர் வரவேற்றார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் வெளியிட்ட டுவிட்டர்(Twitter) செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு எனது நன்றி.  எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன் என்று தெரிவித்து உள்ளார்.  இதுவே அவரது இறுதி டுவிட்டாக அமைந்து உள்ளது.

இந்த ஒரு நாளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன் என்று உருக்கமாக பதிவிட்ட சுஷ்மா சுவராஜ். வாழ்நாள் முழுக்க காத்திருந்த ஒரு விஷயத்தை பார்த்த மறு நாளே, அவர் தனது வாழ்நாளை முடித்துக் கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை இந்த பிரிவு அனைத்து காட்சிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related News