திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      Politics      இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போவது யார்.?

இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போவது யார்.?

   
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போவது யார்.?

இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும்  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில். தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்து உள்ளது.

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமார் 12  ஆயிரம்  பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

 


மத்திய சென்னை

வட சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சீபுரம்

கடலூர்

கள்ளக்குறிச்சி

பெரம்பலூர்

திருச்சி

தஞ்சாவூர்

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

கரூர்

ஈரோடு

சிவகங்கை

விருதுநகர்

தென்காசி

திண்டுக்கல்

தூத்துக்குடி

நீலகிரி


கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

திருவள்ளூர்

கிருஷ்ணகிரி

சேலம்

பொள்ளாச்சி

தேனி

திருப்பூர்

இழுபறியில் உள்ள தொகுதிகள்:

கன்னியாகுமரி

அரக்கோணம்

விழுப்புரம்

ஆரணி

சிதம்பரம்

கோவை

ராமநாதபுரம்

தர்மபுரி

மதுரை

நாமக்கல்

திருவண்ணாமலை

தென் சென்னை

திருநெல்வேலி

புதுச்சேரி

தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்   நடந்து முடிந்து உள்ளது. இதன் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலையும் தாண்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது 22 தொகுதிகளின் இடைத்தேர்தல். கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்துள்ளது.

இதன் முடிவுகள் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி தொடருமா ? தி.மு.க. இடைத்தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்துமா? இல்லை அ.ம.மு.க. அதிர்ச்சி  கொடுக்கப்போகிறதா? என்ற கேள்விகள் எழுந்து உள்ளன.

    இத்தனை கேள்விகளுக்கும் மக்களின்  பதில் வரும் மே 23 ஆம் தேதி தெரியவரும்.

தமிழகத்தில் தி.மு.க பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு வெளி வந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்  மக்களின் கருத்துக்கணிப்பு தி.மு.க விற்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் பொருட்படுத்த போவதில்லை என்றும் மக்களின் கருத்துக்கணிப்பு என்ன என்பது வரும் மே 23 ஆம் தேதி தெரிந்து விடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related News