நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      ஆர்.சி.பி ஒரு மரண மாஸ் அணி

ஆர்.சி.பி ஒரு மரண மாஸ் அணி

   
ஆர்.சி.பி ஒரு மரண மாஸ் அணி

ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

அணியில் துவக்க வீரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் களமிறங்கினர். கேப்டன் கோலி, வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்தைத் தவறாக எண்ணி 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ராஜட் படிதரும் ஒரு ரன் சேர்த்து வருண் பந்தில் அவுட் ஆனார். இதனால், பெங்களூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து படிக்கல், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடிய படிக்கல் 25 (28) ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரும் சேர்ந்து கொல்கத்தா பந்துவீச்சை நாசம் செய்தனர். மேக்ஸ்வெல் மூன்று சிக்ஸர்கள் உட்பட 78 (49) ரன்கள் குவித்தார். அடுத்து கடைசிவரை களத்தில் இருந்த டிவிலியர்ஸ் 76 (34) ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக, கடைசி மூன்று ஓவர்களில் டிவிலியர்ஸ், கைல் ஜேமிசன் 11 (4) மிரட்டலாக பேட்டிங் செய்ததால். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 204/4 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு நிர்ணயத்தது.

கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். கில் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து, நிதிஷ் ராணாவும் (18) ஆட்டமிழந்ததால். பந்துவீச்சாளர்கள் அழுத்தங்கள் இன்றி செயல்பட்டனர். இதனால், கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 25 (20), இயான் மோர்கன் 29 (23), தினேஷ் கார்த்திக் 2 (5) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து ஷகிப் அல் ஹாசன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஷகிப் 25 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் மட்டும் அடித்தார். இருப்பினும், மறுமுனையில் ரஸ்ஸல் ரன் மழை பொழிந்தார். இறுதியில் ரஸ்ஸலும் 31 (20) ஆட்டமிழந்தார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 166/8 ரன்கள் மட்டும் சேர்த்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

ஆர்சிபி பௌலர்கள் கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்களையும், ஹர்சல் படேல், யுவேந்திர சாஹல் இருவரும் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.

Related News