நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      பயத்தில் வீரர்கள்’ ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா?

பயத்தில் வீரர்கள்’ ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா?

   
பயத்தில் வீரர்கள்’ ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. இதனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் பல இந்தியாவில் இருந்து புறப்படும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. தடையை மீறி ஆஸிக்குள் நுழையும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது, ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டாலும் கூட, வீரர்களால் ஆஸிக்குள் நுழைய முடியாது. இந்தியாவில் தான் தங்கியிருக்க வேண்டும். இதனால் ஆஸி வீரர்கள் நாடு திரும்புவது சற்று கடினமாகும்  

Related News