நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      குடும்பம் முக்கியமா? இல்ல ஐபிஎல் முக்கியமா?

குடும்பம் முக்கியமா? இல்ல ஐபிஎல் முக்கியமா?

   
குடும்பம் முக்கியமா? இல்ல ஐபிஎல் முக்கியமா?

ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அதிரடியாக வெளியேறி உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகி தாய் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஆஸி வீரர் ஆண்ட்ரூ டை, கொரோனா அச்சம் காரணமாக 14ஆவது சீசனிலிருந்து விலகியுள்ளார்.


இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆடம் ஜம்பா, கொரோனா நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தேவையா? என அதிரடியாக 
நிர்வாகத்தை சாடியுள்ளார். 

கிரிக்கெட் விளையாடுவதற்காக பல இடங்களில் தங்கி இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் இவ்வாறு தங்கி இருப்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படக் கூடியது. துபாயில் மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்கு இருந்து ஐபிஎலில் பங்கேற்றபோது எனக்கு எவ்வித அச்சமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் கொரோன எல்லை மீறி போயுள்ளது இதனால் எனக்கு பாதுகாப்பு  இல்லை என கருதுகிறேன். இதனால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். 

இந்தியாவில் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதற்குள் நிலைமை சரியானால் நல்லதுதான். இல்லையென்றால், இங்குத் தொடரை நடத்துவது தொடர்பாக உலக அளவில் மிகப்பெரிய விவாதம் மற்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு என்றார்.

மேலும் பேசிய ஜாம்பா, “ஐபிஎல் தொடர் பலருக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் எனச் செல்பவர்களின் குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தால் கிரிக்கெட் குறித்துக் கவலைப்பட மாட்டார்கள் என நினைக்கிறேன். ஐபிஎலில் இருந்து பலர் விலகினால், அதன்மூலம் அவர்கள் வருமானத்தை இழக்க நேரிடும். ஒருசிலர் என்னைப்போல் வருமானத்தையும் பொருட்படுத்தாமல் உடல்நலம்தான் முக்கியம் எனக் கூறி வெளியேறியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை என்னுடைய உடல்நலம்தான் முதன்மையானது” எனத் தெரிவித்தார்.

Related News