நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      தோனி பிடிவாதம் திடீரென்று பிளானை மாற்றிய சிஎஸ்கே!

தோனி பிடிவாதம் திடீரென்று பிளானை மாற்றிய சிஎஸ்கே!

   
தோனி பிடிவாதம் திடீரென்று பிளானை மாற்றிய சிஎஸ்கே!

தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடமும் டிரான்ஸ்பர் முறையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான டிரான்ஸ்பர் விண்டோ முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் பிற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை வாங்க முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டிரான்ஸ்பர் முறை மூலம், ஒரு அணியில் மூன்றுக்கும் குறைவான போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை மற்ற அணி வாங்க முடியும். உள்நாடு, வெளிநாடு என யாரைவேனாலும் விதிமுறைக்கு உட்பட்டு வாங்கலாம். இதற்கு இரு அணிகளின் குழுவினர் மற்றும் கேப்டன்கள் சம்மதம் மிக முக்கியம். கடந்த காலங்களில் வெளிநாட்டு வீரர்கள்தான் அதிகளவில் டிரான்ஸ்பர் முறை மூலம் மற்றொரு அணிக்குச் சென்றார்கள்.

கொரோனா அச்சம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் சாம்ப போன்ற சில முக்கிய வீரர்கள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால், இந்த வருடம் அதிகளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை ஒரு மிக முக்கிய இடது கைய் சுழற்பந்து வீச்சாளரை மற்றொரு அணிக்கு டிரான்ஸ்பர் செய்யும் முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மகேந்திரசிங் தோனி ஒப்புக்கொள்ளவில்லை. முடியவே முடியாது என திட்டவட்டமாக அவர் கூறிவிட்டதால், அணி நிர்வாகம் அந்த முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அணியில் எவ்வித குறையும் இல்லை என்பதால், மற்ற அணிகளிலிருந்து டிரான்ஸ்பர் மூலம் வீரர்களை வாங்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. சென்னை அணி கடந்த போட்டிகளில் நல்ல விளையாட்டை வெளிப்படுத்தியதால் இந்த வருடம் கடுமையாக அணியாக கருதப்படுகிறது.

Related News