விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Events      9வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது

9வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது

   
9வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவின் போது பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பயணம் செய்து மகிழலாம். மேலும், பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்தவாறு கண்டுகளிக்கலாம்.

இதனிடையே நடப்பு ஆண்டில் பலூன் திருவிழா எப்போது நடைபெறும் என மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பலூன் திருவிழாவானது பொள்ளாச்சியில் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் ராட்சத பலூன்கள் அனைத்தும் 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பொள்ளாச்சிக்கு வர வழைக்கப்படுகின்றன.

இந்த பலூன் திருவிழா, இந்தியாவிலேயே கோவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும். இதில் பங்கேற்க அனைத்து மாநிலங்களை சேர்ந்த மக்கள் பொள்ளாச்சியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த பொங்கல் கொண்டாட்டத்தை உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மாற்றுங்கள்! 

மேலும், இது குறித்த விவரங்களுக்கு https://www.tnibf.com/ என்ற இணையதளத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி : ஜனவரி 12-16, 2024
இடம் : பொள்ளாச்சி

Related News