தொலைக்காட்சி பிரபலங்களுடன் உணவு மற்றும் இசை திருவிழா !!!
கோயம்பத்தூரில் சிறப்பாக நடக்கும் கோவை விழாவின் ஒரு பகுதியான உணவு திருவிழா தற்போது கொடிசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா உணவு விழா வரும் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. 140 க்கும் மேல் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அனைத்து வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த உணவு திருவிழாவில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஜமாப் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டீபன் தேவஸ்ய், அனுராதா ஸ்ரீராம், திவாகர் ஆகிய தொலைக்காட்சி பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் மை ஷோ மூலமாகவும் அல்லது விழா நடக்கும் தேதிகளில், விழா நடக்கும் இடத்தில் மதியம் 1 மணி முதல் இரவு 11 மணிவரை பெற்றுக்கொள்ளலாம்.