Home     Coimbatore News      City news      பொள்ளாச்சிக்கு அப்புறம் கோயம்புத்துரா???

பொள்ளாச்சிக்கு அப்புறம் கோயம்புத்துரா???

பொள்ளாச்சிக்கு அப்புறம் கோயம்புத்துரா???

பொள்ளாச்சி சம்பவம் அம்பலம் ஆன நிலையில் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி கபடி பயிற்சியாளர் விஷயம் வெளிவந்துள்ளது.  கபடியில் பெரும் ஆர்வம் கொண்ட ஒரு மாணவி விஸ்வநாதனிடம் பயிற்சி பெற்று வந்தார். அவ்வாறு பயிற்சி பெற்று கொண்டு இருக்கையில். ஒரு நாள் விஸ்வநாதனின் மகன் சஞ்சீவ் குமார்  மாணவியை தன் வீட்டிற்கு தனியாக வருமாறு கேட்டிருக்கிறார் அவ்வாறு வர மறுத்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கையில் உன்னையும் இணைத்து விடுவேன்  என்று மிரட்டியது மட்டுமல்லாமல் மாணவியிடம் நீ கன்னி தன்மை உடையவளா என்று ஆபாசமாக பேசியிருக்கிறார் ...

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி அவரை திட்டிவிட்டு போத்தனுர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் இதை அடுத்து விரைந்து சஞ்சீவை கைது செய்தது காவல்துறை... தன் மகனை கைது செய்துவிட்டனர் என்று ஆத்திரத்தில் மாணவி வீட்டிற்கு சென்ற சஞ்சீவின் தாயார் மாணவியை புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார்...

விஸ்வநாதன் அவரிடம் பயிற்சி பெரும் சில மாணவிகளிடம் இவ்வாறு பாலியல் தொல்லை செய்வது வழக்கமாம் அவ்வாறு செய்ய மறுத்தால் அம்மாணவிகளை தேர்வு எழுத விடாமல் செய்துவிடுவாராம்... இவர் மட்டுமல்ல இவரின் மகன் சஞ்சீவ்வும் இணைந்து பாலியல் தொல்லை செய்வாராம்...

Related News