சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி

அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி

   
அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி அபராதம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1ம் முதல் அமல்படுத்தப்பட்டது, இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது.  மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தற்போது குஜராத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.

tn traffic rules

மேற்கண்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது கேரள மாநில அரசும் இணைந்துள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அபராத தொகையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா ? என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் தமிழக வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த சமயத்தில் அவர்கள் அனைவருக்கும் ஓர்  மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 

traffics rules 2

அபராத தொகைகள் மிக கடுமையாக இருக்கிறது என்றும், அதனை குறைக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் சிலர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போதைக்கு புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது விதிக்க வேண்டாம் எனவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி இந்த பரிந்துரையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழக அரசும் அபராத தொகைகளை அதிரடியாக குறைக்கவுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும்  தமிழக அரசு கூறியுள்ளது.

Related News