மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      தடையை நீக்கி மீண்டும் களம் இறங்கிய  டிக் டாக் ! காரணம் என்ன ?

தடையை நீக்கி மீண்டும் களம் இறங்கிய  டிக் டாக் ! காரணம் என்ன ?

   
தடையை நீக்கி மீண்டும் களம் இறங்கிய  டிக் டாக் ! காரணம் என்ன ?

டிக் டாக்(Tik Tok) செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. மதுரை(Madurai) கிளை வழக்கறிஞர் முத்துக்குமார்(Muthu Kumar) தாக்கல் செய்த மனுவில்: டிக் டாக் செயலியை பலர் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து, சினிமா பாடல்களுக்கு நடனமாடி, ஆபாச உடையணிந்தும், உடல் அசைவுகளை செய்தும், பலர் வீடியோக்களை பதிவிடுகின்றனர். 'டிக் டாக் செயலியால் பல  உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே, மத்திய அரசு டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு தடை மற்றும் ஊடகங்களில் டிக் டாக் வீடியோக்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது என விசாரணையில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கை நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது. டிக் டாக் தரப்பு மூத்த வழக்கறிஞர்: இந்நீதிமன்ற உத்தரவிற்கு பின் சர்சைக்குரிய அல்லது ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் 60 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.மேலும் இதுப்போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், 15 நிமிடங்களில்(15 mins) அகற்றப்படுகிறது. மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு, டிக் டாக் செயல்படும், தடையால் பணியாளர்கள் வேலையை இழப்பர் இதுபோன்ற விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி, கிருஷ்ணா தலைமையில் பார்லிமென்ட் நிலைக்குழு அமைக்கப்பட்டது. "டிக் டாக்" செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய வேண்டுமென்றால் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இச்செயலியில் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், தானியங்கி முறையில், நீக்கம் செய்யும் வசதி செயலியில் உள்ளது. இச்செயலி பற்றி புகார் செய்யும்  வசதி இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது போன்ற சிறப்பு அம்சங்களை மாற்றியுள்ளதை டிக் டாக் தரப்பு மூத்த வழக்கறிஞர் தடையை நீக்க கோரி முன்வைத்தார். 

"ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய இயலாத வகையிலும்", 18 வயதிற்கு(18+) கீழுள்ளவர்கள், சித்தரிப்பு வீடியோக்களில் நடிக்க முடியாது போன்ற உத்தரவாதத்தை 'டிக் டாக்' நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் தடை உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். டிக் டாக் நிறுவனம் உத்தரவாதத்தை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related News