ஒட்டு மொத்த டிக்டாக் நிறுவனத்தையும் வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. இதற்காக அந்நிறுவனம் 50 பில்லியன் டாலர்களை டிக்டாக் நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.75 லட்சம் கோடிகள் ஆகும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் டிக்டாக் பிரிவுகள் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல்கள் குறித்தெல்லாம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மைக்ரோசாப்ட் மௌனம் காத்து வந்தது.
இந்த நிலையில் " அமெரிக்காவின் ஆரக்கிள்(Oracle) நிறுவனத்துடன் டிக் டாக் நிறுவனம் திடீர் ஒப்பந்தம் செய்துள்ளது."
" அமெரிக்க உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டிக் டாக் மறுப்பு தெரிவித்து ஆரக்கிள் நிறுவனத்தை தொழில்நுட்ப பங்குதாரராக தேர்வு செய்துள்ளது டிக் டாக். ஆரக்கிள் நிறுவனத்திற்கு டிக் டாக் அமெரிக்க உரிமையை விற்கப்படலாம்" என தகவல் வெளியாகியுள்ளது.