கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     Coimbatore News      City news      கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தொண்டர்கள்!

கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தொண்டர்கள்!

   
கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தொண்டர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேமுதிக தலைவர் மற்றும் முன்னாள் நடிகருமான  கேப்டன் விஜயகாந்த் இந்த ஆண்டு தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது பிறந்தநாள் திருவிழா போல தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் நேற்று கொண்டாடப்பட்டது.

தேமுதிக மாவட்ட அலுவலகம் முன்பு தேமுதிக கொடியை ஏற்றி கேக் வெட்டி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி சிறப்பித்தனர். 

மேலும் அவரது ஆரோகியாதிக்காகவும் நன்மைக்காகவும் பல இடங்களில் பிராத்தனைகள் நடத்தப்பட்டன. அதில் புளியகுளத்தில் உள்ள அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதுமட்டுமின்றி கோவையில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிராத்தனையும் ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

123கோவை சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்!

                                                                                                                                - தாணு தமிழ்

Related News