கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     Coimbatore News      City news      கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் !

கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் !

   
கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் !

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருடமும் பல முன்னேற்பாடுகளுடன் கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்தியில் சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. 

குறிப்பாக தமிழகத்தில் தாக்குதல் நடத்த கோவை நகரை முக்கிய இலக்காக கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசாரை ரோந்து பணியில் அமர்த்தியுள்ளனர். மேலும் கோவையில் நேற்றிரவு முதல் தீவர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலானது பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஷாப்பிங் மால், வழிபாட்டு தளங்களில் நடக்க நேரிடும் என்றும், இது போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

கோவை மாநகரில் ஏறத்தாழ 1000 சிலைகளும், புறநகரில் 4000 க்கும் மேல் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதையொட்டி விரிவான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Coimbatore Red alert

இந்நிலையில்  இலங்கை தேவாலயங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை போன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மையமாக கொண்டு  விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்த இலங்கை பாக்கிஸ்தான் வங்கதேசத்திலிருந்து லஷ்கர் இ தொய்பா (எல்இடி) திவரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பயங்கரவாதிகள்  தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

போலீசார் வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவர்களை அடையாளம் கண்டால் உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்கவும். 

Related News