மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் நடந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் ரயிலை இயக்கும் மின்னணு சாதனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலில் அதிகாலை 2 மணிக்கு நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் எரிந்து சேதம் என்று வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் நடமாட்டம் குறைவாகவே இருந்ததால் இந்த தீ விபத்தால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இதுவரை இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரியவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.