கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 16 பெட்டிகளுடன் கொண்ட சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி பட்டேல் நகருக்கு சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழியாக திங்கட்கிழமை இரவு டெல்லி பட்டேல் நகரை சென்றடையும். அங்கு இருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு வடகோவை ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்து சேரும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிகையில், ‘‘இந்த சிறப்பு சரக்கு ரயிலில் 16 பெட்டிகளில் 350 டன் பொருட்கள் கொண்டு செல்ல முடியும். காய்கறிகள், உணவு பொருட்கள், மருந்துகள், முகக்கவசங்கள், துணிகள் போன்ற பொருட்களை இந்த ரயில் ஏற்றி செல்லும்,’’ என்றார்.