முகெனுக்கு அதிர்ச்சி தந்த மரணச்செய்தி!         ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான்!!         இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!        
Home     Coimbatore News      City news      தன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

தன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

   
தன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

ஆணிவேருக்கு வந்தடைந்த மழைநீர் !

கோவை: மருதமலையடிவாரத்தில் அமைந்துள்ள நீரோடைகள், சோமையம்பாளையம், கஸ்தூரிநாய்க்கம்பாளையம் கிராமத்திலுள்ள தடுப்பணை, குட்டை மற்றும் குளம் ஆகியவற்றில் நிறைந்து செல்வசிந்தாமணி குளத்தை சென்றடைகிறது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அதிகப்படியான மண் எடுப்பு மற்றும் சில ஆக்கிரமிப்பு காரணங்களால் குட்டை, தடுப்பணைக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது. 

இந்நிலையில் நீர்நிலையை சுத்தம் செய்து மழைநீரை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து " ஆணிவேர் " என்ற ஒரு அமைப்பை சரியான நேரத்தில் துவங்கி செயல்படவும் ஆரம்பித்தனர். 

இதன் முதற்படியாக, கடந்த ஏப்ரல் மாதம் ஓடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மலையடிவாரத்தில் இருந்து மழைநீர் செல்லும் ஓடை, தடுப்பணை ஆகிய அனைத்தயும் சோமையம்பாளையம்வரை கிட்டத்தட்ட 4 கி.மீ  தூரத்திற்கு ஓடையை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதற்கு உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்) மூலமாக மழைநீர் பாதையை தூர்வாரும் பணியில் முழுவீச்சுடன் ஜூலை மாதம் செயல்பட தொடங்கினர். இந்நிலையில் தொடர்மழை பெய்து வரும் காரணத்தால் தற்போது சோமையம்பாளையம் குளம், குட்டை ஆகிய அனைத்தும் நிறைந்து காணப்படுகிறது. 

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக இருந்ததாகவும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துள்ளதகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Related News