Home     Coimbatore News      City news      கோவையில் பிரம்மாண்டமான விதை பந்து திருவிழா!!!

கோவையில் பிரம்மாண்டமான விதை பந்து திருவிழா!!!

   
கோவையில் பிரம்மாண்டமான  விதை பந்து திருவிழா!!!

பூமி வெப்பமயமாவதை (Global Warming) தடுப்பதற்கும்  நமது கோவையை சோலையாக   மாற்றுவதற்கும் பிரம்மாண்டமான  விதை பந்து திருவிழா நடைபெற உள்ளது.  ருதம்பரா  யோகா அறக்கட்டளை, N.G இராமசாமி நினைவு மேல் நிலைப்பள்ளி, மற்றும்  பொதுநல தொண்டு நிறுவனங்கள் மற்ற பள்ளிகள், கல்லூரிகள் இணைந்து இவ்விழாவை  நடத்த உள்ளனர்.
இவ்விழாவின் நோக்கம், "நம் சந்ததியினருக்கு இடைவிடாது குறைவிலாது தண்ணீர், நாம் சுவாசிக்க, நமக்கும் நம் வாழும் பூமிக்கும் குளிர்ந்த நிழல், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வாரத்தை மேன்படுத்துவதற்கும், நமக்கும் மற்ற உயிர்களுக்கும்  உணவு கொடுக்கும் விவசாயம் செழிப்பதற்கும்  மழை  வளம் பெருக்க மரங்கள் ஒன்றே தெளிவான தீர்வு. மரங்கள் அதிகரிக்க விதைகள் ஒன்றே உன்னதமான தீர்வு".
இந்த பிரம்மாண்டமான விதை பந்து திருவிழா கோவை(coimbatore) மற்றும் கோவையை சுற்றியுள்ள  குளங்களிலும், ஆறுகளின்  ஓரங்களிலும் நொய்யல் ஆற்றுப்படுகையிலும் விதை பந்து வீசும்  நிகழ்வு வருகிற 10 ஆகஸ்ட் 2019 மற்றும் 11 ஆகஸ்ட் 2019 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில்  ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.
விதை பந்து திருவிழாவில் நீங்களும் கலந்து கொண்டு நம் கோவையை பசுமை நிறைந்த சோலையாக மாற்றுங்கள்.


தொலைபேசி எண்: 8610823072, 9842743234, 9994910202
இடம் : N.G இராமசாமி நினைவு மேல் நிலைப்பள்ளி

Related News