Home     Coimbatore News      City news      பெண்ணின் மீது ஆசைப்பட்ட சரவணபவன் உரிமையாளர் வழக்கு!!!

பெண்ணின் மீது ஆசைப்பட்ட சரவணபவன் உரிமையாளர் வழக்கு!!!

   
பெண்ணின் மீது ஆசைப்பட்ட சரவணபவன் உரிமையாளர் வழக்கு!!!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ்சாந்தகுமாரை 2001-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கு நேற்றுடன் முடிவிற்கு வந்துள்ளது.


தமிழகத்தை புரட்டிப்போட்ட இவ்வழக்கு என்னவென்றால் சரவணபவன் மேலாளர் ஒருவரின் மகள் தான் ஜீவஜோதி. இவரின் மீது காதல் வையப்பட்ட உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று இருந்திருக்கிறார். மேலும் ஜோதிடர் ஒருவர் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் இவரின் தொழிலில் லாபம் பலமடங்கு பெருகும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜீவாஜோதி பிரின்ஸ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் பிரின்ஸை கொடைக்கானல் தூக்கி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கே புதைத்து விட்டார்.

மேலும் இந்த கொலைவழக்கில் ராஜகோபால் உட்பட 8 பேர் சேர்ந்து கொலை செய்ததாக வீசாரணை தொடர்ந்து வந்தது. அதில் ராஜகோபால்  உள்பட 6 பேருக்கு 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜாமினில் வெளிவந்த ராஜகோபால் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையிடு செய்தார். சாட்சிகள் மிக வலுவாக இருந்ததால் ஆயுள் தண்டனை உறுதியாகியுள்ளது மற்றும் 2019 ஜூலை 7ஆம் தேதிவுடன் நீதி மன்றம் அளிக்க பட்ட கேடு முடிவடைகிறது இன்று அவர் ஆஜராக வேண்டும் ஆனால் அவர் இன்று ஆஜராக மறுத்துள்ளார்.

Related News