சமீபகாலமாக பட்டணம், சூலூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக 2 வாரத்திற்கு ஒரு முறை உப்புநீரும், 3 வாரத்திற்கு ஒரு முறையும் குடிநீர் பெற்று வருகின்றனர்.
பட்டணம், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பகுதிவாசிகளுக்குப் போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புவாசிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், குடிநீர் வினியோகம் போதுமானதாக இல்லை, இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.