பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !         லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     Coimbatore News      City news      ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு !!!

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு !!!

   
ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு !!!

இணையம் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆம் தற்பொழுது  இந்திய ரிசர்வ் வங்கி ஆஃப்லைன் கட்டண வசதியை செயல்படுத்தியுள்ளது.

நம்மில் பலருக்கு பல முறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, ​​இணைய வசதி சரிவர இல்லாமல் நிறைய நேரம் எடுக்கும். இதன் காரணமாக பல முறை மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது உங்களிடம் டிஜிட்டல் கட்டணம் இருந்தால் இணைய இணைப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி இந்த சிக்கலை தீர்த்துள்ளது.

இப்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் கூட நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

ரிசர்வ் வங்கி தற்பொழுது ஒரு சிறிய தொகையை ஆப்லைன் இணையம் இல்லாமல் அட்டை மற்றும் மொபைல் மூலம் செலுத்த அனுமதித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ரூபாய் 200 வரை செலுத்த அனுமதிக்கப்படும். இந்த முயற்சியின் நோக்கம், இணையத்துடன் இணைப்பு குறைவாக உள்ள இடங்களிலும் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை  செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகும்.  இந்த பைலட் திட்டம் மார்ச் 31 - 2021 வரை இயங்கும். 

இந்த வசதி விதி அடிப்படையில் மற்றும் வெளிப்டையானதாக இருக்கும். அதில் மனித தலையீடு இருக்காது என்றும்  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 

Related News