கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     Coimbatore News      City news      இனி பொள்ளாச்சி தனி மாவட்டமா ?

இனி பொள்ளாச்சி தனி மாவட்டமா ?

   
இனி பொள்ளாச்சி தனி மாவட்டமா ?

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 2 மாவட்டங்களை புதிதாக பிரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
2019 ஆம் ஆண்டு சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது என்ற அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதை தொடர்ந்து கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து 34 - வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து 35 - வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் என 2 மாவட்டங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் 2 மாவட்டங்களை பிரிக்கப்போவதாக கூறிய நிலையில், தஞ்சாவூர் மற்றும் கோவை மாவட்டத்தை பிரிக்க முடிவுசெய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கோவை(Coimbatore) மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சி(Pollachi) தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. மேலும் இதுகுறித்த தகவலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டதற்கு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என கூறினார். 

தற்போது தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்கள்: 
1. சென்னை 
2. காஞ்சிபுரம் 
3. திருவள்ளூர் 
4. திருவண்ணாமலை 
5. வேலூர் 
6. விழுப்புரம் 
7. கடலூர் 
8. அரியலூர் 
9. பெரம்பலூர் 
10. திருச்சி 
11. புதுக்கோட்டை 
12. தஞ்சாவூர் 
13. நாகப்பட்டினம் 
14. திருவாரூர் 
15. சேலம் 
16. தருமபுரி 
17. கிருஷ்ணகிரி 
18. நாமக்கல் 
19. கரூர் 
20. ஈரோடு 
21. திருப்பூர் 
22. கோவை 
23. நீலகிரி 
24. திண்டுக்கல் 
25. மதுரை 
26. ராமநாதபுரம் 
27. தேனி 
28. சிவகங்கை 
29. விருதுநகர் 
30. திருநெல்வேலி 
31. தூத்துக்குடி 
32. கன்னியாகுமரி 
33. கள்ளக்குறிச்சி 
34. தென்காசி 
35. செங்கல்பட்டு .

மேலும் புதிய 2 மாவட்டங்கள் உருவானால் 36 - வது  மாவட்டமாக கும்பக்கோணம், 37 - வது  மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும். 

Related News