விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      City news      சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு வெளியிட்ட பாக்யராஜ்-க்கு போலீசார் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு வெளியிட்ட பாக்யராஜ்-க்கு போலீசார் எச்சரிக்கை

   
சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு வெளியிட்ட பாக்யராஜ்-க்கு போலீசார் எச்சரிக்கை

நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர் நாங்கள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு படப்பிடிப்பிற்காகச் செல்வது உண்டு. அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அதிகளவில் செல்வார்கள். அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி சிலர் இறந்து போய் விடுவது சாதாரண விபத்து அல்ல, பணம் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொலை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த வீடியோ மேட்டுப்பாளையம் மக்களை மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாக்கியராஜின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவும், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.

Related News