Home     Coimbatore News      City news      பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை!!!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை!!!

   
பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை!!!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்வில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து பால் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அவற்றை பாட்டிலில் விற்பனை செய்யும் ஏற்பாடை செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 14 வகை மறு சுழற்சி செய்யவும் செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் அபராதம் இல்லை சிறை தண்டனை என்று கட்டளையிட்டது. அதன் விளைவால் பிளாஸ்டிக் பயன்பாடு அரை சதவீதம் குறைய, பிளாஸ்டிக் தயாரிக்கும் உரிமையாளர்கள் என பலரும் அவர்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் 100% மறு சுழற்சி செய்ய கூடியது என்று கூறி தீர்ப்பை மேல்முறையிடு செய்தனர். ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.  

அத்துடன் தற்போது பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது, நொறுக்கு தீனிகளை விற்க பிளாஸ்டிக் பையை உபயோகிக்க கூடாது, எண்ணெய்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி விற்பனை செய்ய கூடாது, சாக்லேட்டுகள் மற்றும் மருந்து பொருள் என பல பொருளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related News