சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.107.45 ஆக உள்ளது. மேலும், ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.97.52 ஆக உள்ளது.
.நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி வருகின்றன. சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.